| Photo by Katerina Kerdi on Unsplash | |
தேடித் தேடித் தொலைகின்றோம்
தேவை தீர்க்கத் தேடுகின்றோம்
தேடுதலே வாழ்க்கை என்கின்றோம்
தேடிப் பொருள் சேர்க்கின்றோம்
தேவைகள் தீராததால் சோர்ந்து
தேடலின் அர்த்தம் உணர்கின்றோம்
தேகம் துவண்ட வயதில் - நிம்மதி
தேடும் மனதில் - கடந்த காலமும்
எதிர்காலமும் குழம்பிக் கிடக்க
நிகழ்காலமும் தொலைத்து
தேடுதலை மீண்டும் தொடர்கின்றோம்.
- ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை.