புது யுகம் படை
புத்தகம் படி...
தூய அகம் உடை
புத்தகம் படி...
புதிருக்கு கொடு விடை
புத்தகம் படி....
புன்னகை பூக்கும்
புத்தகம் படி...
நம்பிக்கை பிறக்கும்
புத்தகம் படி...
இயற்கை செழிக்கும்
புத்தகம் படி...
செயற்கை மறக்கும்.!
புத்தகம் படி....
புரிந்து படி
புத்தகம் படி
தெளிந்து படி
புத்தகம் படி
அறிந்து படி
புத்தகம் படி
மகிழ்ந்து படி!
புத்தகம் படி...
வாழ்கைப் படி
இனி வசந்தமே படி
பிரபஞ்ச பயணம்
இனி இனிதே படி!
கவிஞர் சிவயசோதா மணி, மதுரை