உலக நடன தினம். | கவிஞர் சிவயசோதா மணி



நடன கலைஞனுகு
சமர்ப்பணம்....

கால் அசைவுகள்
பூமிக்கு அர்ப்பணம்
கை அசைவுகள்
காற்றுக்கு சமர்ப்பணம்

கண் அசைவுகள்
பேசும் மொழிகள்
மனதில் பதியும்
முத்திரைகள்..

சலங்கை ஒலி
பிரபஞ்சத்தின் சங்கீதம்
புன்னகை
கலைஞனின் நகை.

நடனம்,
தமிழனின் கலாச்சாரம்
நடனம்
தமிழனின் தெய்வீகம்!

-கவிஞர் சிவயசோதா மணி, மதுரை 

Post a Comment

0Comments
Post a Comment (0)