உழைப்பாளர் தினம்! | கவிஞர் சிவயசோதா மணி


உனக்காய் ஒருநாள்!


உழைப்பாளியின்
வியர்வைத் துளி
உலகின் துயர் தீர்க்கும்
உன்னத மருந்து!!

உழைப்பாளி....
உதிரத்தையே
உழைப்பாக்கி,
உழைப்பையே
மூலதனமாக்கிய
உறவுகளின் திறவு!!

உழைப்பாளி...
உழைத்து களைத்தும்
மழைத் துளியாய்
மனங்களை நனைத்த
மனிதத்தின் மகிழ்வு!!

உழைப்பாளி....
உழைப்பே உயர்வு..
உழைப்பாளியே
உயர்வின் கனிவு
செயலில் துணிவு!!

உழைப்பாளி....
உன் பயணம் இனிது!
வெற்றியே உன் முடிவு
உயர்ந்ததே உன்
அர்ப்பணிப்பு!!
சமர்ப்பணமே
மங்கள வாழ்த்து!!!


-

Post a Comment

0Comments
Post a Comment (0)