பெண்னென்பவள் | கவிஞர் திருமதி விஜயாமுத்துக்குமாரசாமி

பெண்னென்பவள் பேதை என்றெண்ணி

மண்ணில் வீழாதே மானுடா

உன்னை ஈன்றவள் அவள்
மண்ணைப் போன்றவள் அவள்

மென்மையும் மேன்மையும் மிகுந்த
உண்மைத் தன்மை அவள்

அழகின் உச்சம் அவள்
அன்பின் எச்சம் அவள்

புன்னகை தேசம் அவள்
பூக்களின் வாசம் அவள்

பொறுமையின் சிகரம் அவள்
பெருமையின் அகரம் அவள்

ஆண்டவனின் உருவாய் அவள்
ஆளுமைத் திறமே அவள்

அக்கினிச சிறகாய் அவள்
அறிவெனும் விளக்காய் அவள்

தாய்மையின் வண்ணம் அவள்
தூய்மையின் சின்னம் அவள்

முயற்சியின் அர்த்தமே அவள்
மூலமும் முதலும் அவள்

கண்ணில் கலங்கம் நீக்கிப்பார்த்தால்
விண்ணில் விளங்கும் ஜோதி அவள்

மண்ணில் வேறிலை - நன்மதி
பெண்ணைப் போலே உயர்ந்ததொன்று

பொன்னிலோ மணியிலோ 
புகழாரம் சூட்டிட

எண்ணியும் பயனிலை
எதுவுமே ஈடிலை


நன்மதி கொண்ட 
உன்னதமான பெண்மைக்கு இக்கவிதையை சமர்ப்பிக்கிறேன்



- கவிஞர் திருமதி விஜயாமுத்துக்குமாரசாமி

Post a Comment

0Comments
Post a Comment (0)