வீரபாண்டிய கட்டபொம்மன் பாணியில் பாலியல் தொல்லை விழிப்புணர்வு கவிதை.


எம் நாட்டு பெண்ணின் நலனை கருத்தில் கொண்டாயா..!

வேலை முடிந்து வீதியில் செல்லும் பெண்ணின் துயரை அறிவாயா..!

தனியே செல்லும் பெண்ணிற்கு பாதுகாப்பு கொடுத்தாயா..!
அத்துமீறி பெண்ணை தீண்டும் நீயெல்லாம் ஒரு "ஆணாடா"...!
நீயெல்லாம் இந்த மண்ணில் வாழ்வது "வீணடா"..!

பாலியல் "தொல்லையடா"...!
இந்த கால கட்டத்தில் நான் இங்கு "இல்லையடா"..!
5 வயது "பிள்ளையடா"..!
மனசாட்சி என்பது உனக்கு "இல்லையடா"..!
நான் தமிழ்நாட்டு "மன்னரடா"..!
நான் ஆண்ட "மண்ணடா"..!
நான் மறைந்த பின் நீதி என்பதே "இல்லையடா"..!
வாள் கொண்டு போரிட்ட "இனமடா"..!
இப்போது தேள் போன்று பெண்ணை தீண்டும் நீயெல்லாம் ஒரு "பிணமடா"..!
பாலியல் சார்ந்து திரியும் நீயெல்லாம் ஒரு "மனிதனாடா"..!
வெள்ளையர்களை விரட்டி நாட்டை காத்த "வீர தமிழனடா"..!
இப்போது நாட்டிலே அதிகரிக்கும் பாலியல் தொல்லையை நினைத்து நெஞ்சம் "கொதிக்கிதடா"..!
என் வாள் வீசப்பட வேண்டியது "வெள்ளையர்களை அல்ல"..!
உன் போன்ற "வெறியர்களை"..!
பாரத தாய் மண்ணிலே பிறந்தது "பெருமையடா"..!
நம் தாய் மண்ணில் பிறந்த ஒவ்வொரு பெண்களையும் பாதுகாப்பது நம் "கடமையடா"..!''- 


 டாக்டர் சிவஉமாதுரைச்சி 

Post a Comment

0Comments
Post a Comment (0)