அவள் தான் பெண் | டாக்டர். சிவஉமாதுரைச்சிபோற்றபட வேண்டியது மண்ணை மட்டுமல்ல..
நம்மை பெற்றெடுத்த பெண்ணையும் தான்..
உண்ணும் உணவை எண்ணும் போது 
பெண்ணின் உழைப்பையும் தாண்டி,
பிறருக்காக தன்னலம் கருதாத தியாகம் தான் பெண்ணின் அடையாளம்..!

அடுப்பு ஊதி பசி ஆற்றுவதும் பெண் தான்..!
அயல்நாடு சென்று அரியணையில் சாதனை புரிவதும் பெண் தான்..!
அவள் இன்றி அணுவும் அசையாது..!
இன்று பெண்ணின் "உழைப்பு"..!
நம் அனைவருக்கும் "வியப்பு"..!
இன்றும் சமுதாயத்தில் இருக்கிறது பெண்ணிற்கு "எதிர்ப்பு"..!
இதை எடுத்து சொன்னால் உலகமே கூறும் "மறுப்பு"..!
ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்கும் "பொறுப்பு"..!
பெண் என்பதால் சில நேரங்களில் ஏற்று கொள்ள வேண்டியதாய் இருப்பது "சகிப்பு"..!
பெண்ணின் கடின வாழ்க்கையை ஒருநாள் வாழ்ந்து பார்க்க முடியுமா என்ற கேள்வியில் உன் மனம் படும் "திகைப்பு"..!
இப்படிபட்ட பெண்ணை தவறாய் பேசுபவர்கள் மனம் "கருப்பு"..!

பெண் என்பவள் புனிதமானவள் என்பதை புரிந்து கொண்டு பெண்ணை மதிப்பதே "சிறப்பு"..! 


- டாக்டர். சிவஉமாதுரைச்சி, தூத்துக்குடி மாவட்டம் 

Post a Comment

0Comments
Post a Comment (0)