மாலை பொழுதில் அலுவலக பணி முடிந்து விடுதிக்கு திரும்பி கொண்டிருந்தேன். மெல்ல மெல்ல இருள் சூழ ஆரம்பித்தது. சாலையின் இரு புறமும் தெரு விளக்குகள் மின்மினி பூச்சியை போல் மின்னி கொண்டிருந்தன.
சாலையில் மக்கள் கூட்டம் இடைவிடாது பயணித்த படியே இருந்தனர்.
அப்பொழுது 7 வயதே நிரம்பிய ஒரு சிறுவனை கண்டேன். அச்சிருவன் தன்னிடமிருந்த மிதிவண்டியில் ஏற முயற்சிக்கிறான் அவனால் முடியவில்லை.
திரும்ப திரும்ப ஏற முயற்சி செய்கிறான் அப்பொழுதும் அவனால் முடியவில்லை. காரணம் அவனை விட அவன் மிதிவண்டி சற்று உயரமாக இருந்தது.
அப்பொழுது இதை எல்லாம் சற்று தூரத்தில் இருந்து கவனித்து கொண்டிருந்த என்னை பார்த்தான்.
என்னை பார்த்த படியே மிதிவண்டில் ஏற முயற்சிதான் அப்பொழுதும் முடியவில்லை.
மீண்டும் என்னை பார்த்தான். அப்பொழுது அச்சிருவனிடம் உன்னால் முடியும் மீண்டும் ஒரு முறை முயற்சித்து பார் என்றேன்.
சிரித்த படியே மிதிவண்டியின் கைப்பிடியில் தன் கைகளை இறுக பற்றினான். மூச்சை உள்வாங்கினான் ஒரு காலை வைத்து மற்றோரு காலால் குதித்து தன் இருக்கையில் அமர்ந்து சென்றான்.
அப்பொழுது தான் ஆட்சிருவனிடமிருந்து நான் ஒன்றை கற்று கொண்டேன்.
விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் எந்த வயதாக இருந்தாலும் எதையும் சாதிக்கலாம் என்று அச்சிருவனிடம் கற்றுக்கொண்டேன்.
மகிழ்ச்சியோடு விடுதிக்கு திரும்பினேன்.
- ரா. செல்வத்தாய் தென்காசி.