சித்திரையும் வந்ததடி
சித்திரை மகளுக்கு கொண்டாட்டமடி.....
ஊரெங்கும் திருவிழாக்கலடி
மக்கள் கூட்டம் பெருகுதடி....
உற்றார் உறவினரை காண
சித்திரை மகளும் வந்தாலடி.......
கும்மியடி சத்தமும்
குழவை சத்தமும் கேட்டு
சித்திரை மகளும் சிரித்தாலடி.....
கோவில் மணியோசையும்
உன்னை வணங்குத்தடி....
மீண்டும் உன்னை காண
ஒரு வருட காலம்
தவம் புரிய வேண்டுமோ.....
வாழ்க தமிழ்
வளர்க சித்திரை மகள்.....!
- ரா. செல்வத்தாய், தென்காசி.