கிருஷ்ணகிரி, மே.17:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் திரண்டதால் பூங்கா களைகட்டியது. கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாளை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் வந்த பொதுமக்கள், குழந்தைகளுடன் பூங்காவில் நேரத்தை மகிழ்ச்சியாக கழித்தனர்.
பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த சீசா, ஊஞ்சல், சறுக்கு மரம் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களில் சிறுவர்கள் ஆர்வத்துடன் விளையாடினர். மேலும், படகு சவாரியிலும் குடும்பத்தினர் ஆர்வமாக பங்கேற்று இயற்கை சூழலை ரசித்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் வெளியில் வந்து குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட்டது மனநிறைவை அளித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
© மகளிர்குரல் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)
.jpg)