ஊத்தங்கரை, மே.16:
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பல் மருத்துவர் டாக்டர் என்.இளையராஜா எம்எல்ஏ அவர்களுக்கு அகில இந்திய மக்கள் நல கழகம், நமது மகளிர் குரல் பத்திரிக்கை மற்றும் டெல்டா மலர் பத்திரிக்கை சார்பில் பாராட்டு மற்றும் வாழ்த்து நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முதல்முறையாக தேர்தல் களமிறங்கிய டாக்டர் என்.இளையராஜா, ஊத்தங்கரை தொகுதியில் பொதுமக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார். அவரது வெற்றியை தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் குரல் பத்திரிக்கையின் இணை ஆசிரியர் வித்யா அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அமைப்பின் சார்பில் நினைவுப்பரிசு மற்றும் ஷீல்டு வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் அகில இந்திய மக்கள் நல கழக நிர்வாகிகள் சந்துரு, தவமணி, வித்யா, பத்மபிரியா உள்ளிட்டோர் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு புதிதாக பதவியேற்றுள்ள எம்எல்ஏவுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் தொகுதி வளர்ச்சிப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு ஊத்தங்கரை தொகுதியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என நிர்வாகிகள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- மகளிர்குரல் செய்திகளுக்காக இணை ஆசிரியர் திருமதி. வித்யா.
© மகளிர்குரல்| செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)