ஆதரவற்றோருடன் பிறந்தநாள் கொண்டாடிய அகில இந்திய மக்கள் நலக் கழக நிர்வாகிகள்.


ஊத்தங்கரை, மே.19:


அகில இந்திய மக்கள் நலக் கழக மாநிலத் தலைவர் டாக்டர் சிவக்குமார், மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் பி. சதீஷ் மற்றும் மாவட்டத் தலைவர் கோபால் ரெட்டி ஆகியோரின் அறிவுறுத்தலின்பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட IT WING தலைவர் திருமதி வித்யா செந்தில்குமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் உள்ள “லிட்டில் ட்ராப்ஸ் ஆதரவற்றோர் பொதுத் தொண்டு அறக்கட்டளை” இல்லத்தில் மனிதநேய நிகழ்ச்சி நடைபெற்றது.


ஊத்தங்கரையை சேர்ந்த செந்தில்குமார் – வித்யா தம்பதியினர், தங்களது பிறந்தநாளை ஆடம்பரமின்றி ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் கொண்டாட முடிவு செய்து, அவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சி அங்கிருந்த ஆதரவற்றோரின் முகங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், சமூக ஆர்வலர்களிடையே பாராட்டுகளையும் பெற்றுள்ளது.


நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட IT WING தலைவர் திருமதி வித்யா, மாவட்ட துணைத் தலைவர் சந்துரு, செந்தில்குமார், யாழினி, நவநிஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

Post a Comment

0Comments
Post a Comment (0)