நம்பிக்கை, அடுத்த நொடி! | ஸ்ரீவித்யா


நம்பிக்கை

ஒரு வார்த்தையே போதுமானது...

ஒரு நாளைச் சிறப்பாக்க

ஒரு மனதைத் தேற்ற

ஒரு வெற்றியைச் சுவைக்க

ஒரு தோல்வியை மறக்க

ஒரு சரித்திரம் படைக்க

ஒரு ஊன்றுகோலாய் இருக்க

ஒரு வார்த்தையே போதுமானது – அது

நம்பிக்கை !


அடுத்த நொடி

அடுத்த நொடியில்

அதிசயம் நடக்கலாம்

அதிர்ஷ்டமும் அடிக்கலாம்

அதிர்ச்சியும் காத்திருக்கலாம்

அமைதியாகவும் கடந்து போகலாம்

அழகான நினைவுகள் மலரலாம்

அடுத்த நொடி வரட்டும்

அதற்கு முன் வாழ்ந்துவிடு

அரிதான இந்த நொடியில்...

அப்புறம் கிடைக்காது.


- ஸ்ரீவித்யா பசுபதி சென்னை. 

Post a Comment

0Comments
Post a Comment (0)