அவள் ஒர் ராஜகுமாரி. | குணாதுரை.

Photo by Ashton Mullins on Unsplash


ராஜகுமாரிக்குத் திருமணம் என்றவுடன் அதில் இருக்கும் பிரச்சனைகளை நினைக்காமல் சந்தோஷமாகவே புறப்பட்டாள். புகுந்த வீடு கேரளாவில். பாக்கும், தேக்கும் வளர்ந்து தொங்கும் மரங்களும் எனப் பார்க்க பார்க்க ஆவல் தீராது.


அவள் உலகம் வேறு, மாமா எப்போவோ தான் குடிக்காமல் இருக்கும், அதனால் கேரள சினேகிதிகளுடன் கடைகளுக்கு (ஷாப்பிங்) போக தமிழ், மலையாளம் திரைப்படங்கள் பார்க்கவும் என காலங்கள் கடந்தன, கேரளாவின் அழகு அவளை ரொம்பவே போர் அடிக்காமல் பார்த்துகொண்டது.


பணத்துக்கும் பஞ்சமில்லை, ஆனால் வயது முதிர்ந்தபோது தான் தெரிந்தது எவ்வளவு பெரிய சிலாக்கியம் கேரள வாசம் என்று, மனிதர்கள் கேரளாவை பார்த்தால் உறுதியாக படைத்த கடவுளின் கைவண்ணத்தை வியக்காமல். இருக்கமாட்டான். அங்கே ஒரு பழமொழி உண்டு. கொல்லம் கண்டால் இல்லம் வேண்டா அதன் அர்த்தம் கொல்லம் என்ற ஊரைப் பார்த்தால் வீடு வேண்டாம் என்று சொல்லிவிடுவார்களாம். அவ்வளவு அழகு தான் போங்கள், மலையும் மலை சார்ந்த இடமும் கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தலும் குறிஞ்சியும் பின்னிப் பிணைந்து காணப்படும் பகுதியை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும். கடற்கரையிலேயே காலத்தை கழித்துவிடலாமே என்று தோன்றும்.


அவ்வளவு பரிசுத்தமான பூமி அது, எங்கு சென்றாலும் தூய்மைதான். ராஜகுமாரிக்கு சின்ன வயது தான் என்றாலும் கேரளத்தாயை மறக்க முடியாது. அவ்வளவு இன்பமான நாட்கள் அவை.அசோகமித்திரனின் வாழ்விலே ஒரு நாள் என்ற கதையில் வருவது போல தான். இன்பம் தந்த அளவுக்கு அவளின் சமாளிக்கமுடியாத துயரங்களின் ஊடாக அவளை நடத்திச் சென்றது. சுவாசிக்க கூட மனதில்லாமல் போனது..


சுகத்தையும் துக்கத்தையும் தராசில் இரண்டு தட்டிலும்,ஒரே அளவில் வைத்து விட்டான் இறைவன். காலம் யாருக்காகவோ ஓடாமல் ஓடிக்கொண்டே இருந்தது. கொஞ்ச நான் ஆன பின் ராஜேயின் மனதில் ஒன்றும் இல்லாதது போல் தோன்றியது.


வாழ்வின் இன்பத்தின் கணக்கும் துன்பத்தின் கணக்கும் தீர்க்கப்படாதது என்பது அவளுக்கு புரியத் தொடங்கியது. ஓடிய ஓட்டங்கள் முடியவில்லை. சிரித்தாள் துன்பத்தின் மத்தியலும் சிரித்தாள். விதியின் சதி அல்ல.ராஜேக்கு சதியும், விதியும் அவளே. தாங்கித்தான் ஓடவேண்டும் மனதின் தைரியத்திற்கு தெய்வம்தான் மருந்தாக முடியும். அதற்காக தெய்வத்திடம் சரணடைந்தாள்.


இறைவனிடம் கையேந்தி நிற்கும் ராஜேக்கு எந்த ஆசையும் இல்லை. இறைவா நான் பெற்ற செல்வங்களை சந்தோஷயாக வாழ விடு என்று தான் கேட்கிறாள் கண்ணீருடன். காலம் ஓர் சுழல் போல அப்போதைய நினைவுகளை கன் முன் கொண்டு வந்து சேர்க்கிறது. பதினாறு வயதும் 4மாதமும் ஆன ராஜகுமாரிக்கு சொந்த தாயின் தம்பியே கணவர், மாமன் அவளை நன்றாகவே பார்த்துக் கொண்டதால் சின்னச் சின்ன கஷ்டங்கள் மறந்து போனது.


பிள்ளைகளிடம் விளையாட்டு, பள்ளிக்கூடம், கண்ணாமூச்சி, பல்லாங்குழி என்று வாழ்ந்தவளுக்கு கேரளாவில் என்னவோ கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல் தான். ஐந்தாறு பேருக்கு சமைக்கத் தெரியாது. அவளின் அம்மாச்சி,தாத்தா, என அன்பைப் பொழிந்தனர். அவர்களின் மகளின் மகளல்லவா, அம்மாச்சி தான் சமையல், ஆனால் எனக்கு முழு சுதந்திரம்.


அவளின் வாழ்வை சுகமாகவே வாழ்ந்தாள். அதன் அடையாளமாக 12வது மாதம் ஒரு மகளையும் பெற்றெடுத்தாள். மாமன் வியாபாரத்தை நல்லபடியாக கவனிக்கும் நல்ல உழைப்பாளி, ஆனால் வாரம் 5 நாட்கள் குடியிலேயே மூழ்கிவிடுவார். குடித்தால் ஹந்தியில் தான் பேசுவார், திருமணத்திற்கு முன் ஒரு வருடம் மிலிட்டரியில் இருந்துள்ளார், திருமணம் முடிந்த போது மிலிட்டரியிலிருந்து வந்துவிட்டார்.


மாமா  நல்லவர்தான் என்று இருந்தவளுக்கு, ஒரு ஆருடம் பார்க்கும் நாக்கு இல்லாத ஒரு வயதான தாய் வீட்டுவாசலுக்கு வந்தார்கள்.உன் கணவருக்கு வேறு ஒரு மாங்கல்யம் உள்ளது என்று கூறியதும் என்னால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் அம்மாச்சியிடம் கேட்ட போது ஆமா, மிலிட்டரியில் இருந்தபோது ஆபீசரின் மகளை விரும்பினான். ஆனால் நான் தான் ஹிந்திக்காரியை கட்ட வேண்டாம், என் மகன் வடக்கவே போய் விடுவான் என்று அழுது, ஒப்பாரி வைத்து, இருக்கிறது அம்மாச்சி.என் தாயும், தாயின் தாயும் என்னை கட்டி வைத்துவிட்டார்கள்.


ஒருபுறம் அவருக்கோ குற்ற உணர்வு. அக்கா மகளை கட்டி வைத்தது ஒருபுறம், வடக்கே நாசிக்கில் இருக்கும் அந்த பெண்ணுக்கு ஆண்குழந்தை பிறந்தது என்று அவருடன் கூட பட்டாளத்தில் இருக்கும் நண்பர்கள் சொல்லிவிட்டார்கள். ஒரு ஆணின் மனதில் என்ன இருக்கும் என்பதைக் கண்டு பிடிக்க முடியாது. மனதுக்குள் அனைத்தையும் வைத்து, அதைப் பாட்டில் வழியே வெளியேற்றிவிடும் குணம் கொண்டவர்கள்.


அதற்கு பிறகு குடிதான் அதிகமானது, ராஜகுமாரிக்கு எல்லாம் புரிய, மூன்று வருடம் ஓடிவிட்டது. 2 குழந்தைகளுக்கும் தாயானாள், ஒரு நாள் குடித்து ஐயோ நான் தப்பு செய்து விட்டேன் என்று வீடே அதிர மாமா ஒரே அழுகை, முன்னரே யோசித்து இருந்திருக்கலாம். இப்போது என்ன செய்வது ஆனாலும், ராஜகுமாரி சொன்னாள், வாங்க அவங்களயும், குழந்தையையும் (ஷீலா) கூட்டி வந்துருவோம்" மாமா ஒரு பதிலும் பேசவில்லை. அவள் அம்மாவோ என் தம்பிய குடிகாரன் ஆக்கிட்ட என்றார்கள். கேரளத்தாய் ராஜேயை (ராஜகுமாரியை பக்கத்தில் உள்ளவர்கள் அப்படித்தான் கூப்பிடுவாங்க) நல்லபடி பார்த்துக் கொண்டாள். நல்லது, கெட்டது புரிந்தது. 


பணத்திற்கு குறைவில்லை. கணவரை தவிர எல்லாரும் அன்பை கொட்டினர். ஆனால் மாமா குடித்தால் என்னைப் பார்க்கவோ பேசவோ அவருக்கு பிடிக்காது. அவர் உலகம் வேறு.ராஜேயின் உலகம் வேறு. போதை இல்லாத நேரங்களில் மட்டுமே ராஜகுமாரியை நன்றாக வைத்துக் கொள்வார். மூன்றாவது ஒரு குழந்தைக்கு தாயானாள் ராஜே. எதற்கும் ஏங்கவில்லை, கடவுள் எல்லாம் தந்ததால் வருடங்கள் ஓடியது. குடிகாரன் எவ்வளவு நாள் தான் குடும்பம் நல்லபடியாக நடத்தமுடியும், மனசாட்சி, ஒருபெண்ணின் கண்ணீர் எப்படி நிம்மதியா இருக்க முடியும், சொந்த ஊருக்கு ராஜே 15 வருட கேரள வாதத்திற்கு பிறகு வந்துவிட்டாள். 


மாமனுக்கு 30வயது. ராஜேக்கு 15 வயது 15வருடங்கள் புடமிட்டது வாழ்க்கை. வாழ்க்கையில் கண்ணீர் எந்தஅளவு விட்டாளோ தெரியாது. அப்படி ஒரு நஷ்டம்.இப்போதும் தன் 75ஆவது வயதில் மாமா 4வருடம் முன்பு இறந்துவிட்டது. ராஜே தன் பிள்ளைகளுடன், பேரப்பிள்ளைகளுடன் இருந்தாலும் ராஜேக்கும் 65 வயது ஆகிவிட்டது. உள்மனது மாத்திரம் நினைத்தாலே கண்ணீர் விடுகிறது,மனம் துடிக்கிறது, மாமாவின் குற்றமா? ராஜேயின் குற்றமா, (ஷீலா) முதல் காதலி, குழந்தை எப்படிஇருப்பாங்க? பாதிக்கப்பட்ட ஷீலாவை பார்க்க மனது ஏங்குகிறது முதல் மரியாதை சிவாஜி போன்று. மாமா மனதால் அழுதது.


ராஜேக்கு அவர் மேல் கோபமும் வரவில்லை.ஆனால் ஒரு பெண்ணை ஏமாற்றாதிங்க, கடவுள் பார்க்கிறான். பாவம் கூடவே வரும்.பாவம் ராஜகுமாரி. அவளின் கதை பாதிக்கபட்டது யார் என்பதல்ல. ஷீலாவையும் மகனையும் பாக்கனும், முடியுமா.. வருடங்கள் ஓடினாலும் ராஜகுமாரி என்ற பெயர் மீது ஒரு வெறுப்பு, மகுடத்தை இழந்த ராஜேயுடைய வாழ்க்கை மங்கி எரியும் விளக்கே. இனி ஒளி வருமா, வராது வராது, ஏக்கத்துடன் போய் சேர விரும்பும் ராஜகுமாரிக்கு ஆறுதல் யார் தரமுடியும். இறைவனே கதி, கண்ணீர்கதை தீரும் நாள் அதிக தூரத்தில் இல்லை.


ஷீலாவுக்காக மகனுக்காக பிரார்த்திக்கிறாள். மன்னித்து விடுங்கள் என்று மனதால் அழுகிறாள்.


- குணாதுரை, K. Puliyankulam, checkanurani, Madurai DT, Tamilnadu.

Phone :6383155943

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)