மாம்பெண்
தோட்டத்தில்
தளிர் இலைகளைத்
தடவியபடி கேட்டாள் மகள்
இது எவ்வளவு வழவழப்பா இருக்கும்மா.
இலையின் நுனியில்
படிந்திருந்த
சிவந்த பசும் இலைகளை
நானும் பார்த்தேன்.
அது பிறந்த சிசுவின் ஈரத்துடன் இருந்தது.
நீயும் அப்படித்தான் இருக்கிறாய் பெண்ணே
என்று கூறியபடி அவளைத் தொட்டேன்.
பசும் வாசனையுடன் ஒரு மாந்தளிராக விலகியோடுகிறாள்.
- அ.ரோஸ்லின், மதுரை Phone : 9952177592.