பெண்ணே! உலகே உன் கையில். | மைதிலி ராமையா

 Image Credit: closler.org


பெண்ணே! உலகே உன் கையில்.

சிறையிருந்து மீண்டு விட்டோம்

சிறகுகளை விரித்து விட்டோம்

உரிமை சமமாய் வேண்டுமென்று

ஒருமித்து நின்று போராடுகின்றோம்.


யாரிடம் உள்ளது நம் உரிமை

எவர் தரக்கூடும் அதை நமக்கு-பதில்

கூறிட முடியாக் கேள்வியிது-பெண்ணே!

கொஞ்சம் சிந்திக்கக் கிடைக்கும் விடை நமக்கு

அடிமைத்தளையைக் களைந்திடனும்

ஆணுக்கு நிகராய் வாழ்ந்திடனும்-எனத்

துடித்திடும் நமக்குள் தான் உளது-நம்

துயரங்கள் களைந்திடும் மார்க்கங்களும். 

அன்னையை மதிக்கா ஆண்களில்லை 

அவர் அன்புக்கு வசப்படா மனிதரில்லை

பின்னும் ஏன் இந்த பேதங்கள்-பெண்ணே!


பேதங்கள் களைந்திட நீ முனைந்தால்,

உயிர்ப்பால் ஊட்டி வளர்க்கையிலே

உணர்வுகள் சமம் என்று நீ ஊன்று

பயிராய் இருக்கும் போதினிலே-நீ 

பதிக்கும் கருத்துகள் நற்பலன் தருமே 


ஆண் பெண் பேதம் தேவையில்லை-என

அன்னை நீ பதிக்கும் வித்துக்கள்

விண் தொடும் விருட்சமாய் வளர்ந்துவிடும்

வேற்றுமை மறைந்த விடியல் வரும்.  


- மைதிலி ராமையா,

Post a Comment

1Comments
Post a Comment