Image Credit: India Today. |
யாதுமாகி நின்றவள்...
சுழற்றியடிக்கும் புயலும் நீ
சுகந்தம் வீசும் பூவும் நீ
மதுரை எரித்த அக்கினிப் பிளம்பும் நீ
மனம் மயக்கும் வெட்கச்சிதறலும் நீ
வாகை சூடிய காளி ரூபமும் நீ
வாழவைக்கும் உமையம்மையும் நீ
பொறுமை கொண்ட பூமாதேவியும் நீ
ரௌத்திரம் பழகிய பாரதி மகளும் நீ
கண்கவர் நதியலை ஓட்டமும் நீ
கட்டுக்கடங்காத காட்டு வெள்ளமும் நீ
சாளரம் நுழையும் நிலவொளியும் நீ
சுற்றும் பூமியின் சூரியனும் நீ
அன்பும் நீ
ஆற்றலும் நீ
ஆதியும் நீ
அந்தமும் நீ
ஆயுதமாய் அல்ல உன் சுதந்திரத்தை
கேடயமாய் கையாளும் கூர்வாளும் நீ
அதிகார கைகளுக்கு விலங்கிடுவதும் நீ
அன்பின் கைகளுக்குள் அகப்படும் சிறைவாசியும் நீ
பெண்ணே ஓ
பெண்ணே
அகிலமாளும் ஆதிசக்தி நீ...
- கீர்த்தனா.பு
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகம் முதுகலை பட்ட மேற்படிப்பு விரிவாக்கம் மற்றும் ஆராய்ச்சி மையம், பெருந்துறை