பெண் | பி.தமிழ் முகில்

Image Credit : dinamani.com

பெண்

மகளென்றே போற்றி வளர்க்கும்
சமூகம் - ஒரு கட்டத்தில்
அவள் மீது மெல்ல மெல்ல
அடக்குமுறைகளை திணிக்க
எதிர்த்து நின்று போராடும் பெண்ணும்
ஒரு கட்டத்தில் துவண்டு
சோர்ந்திருக்கும் வேளையிலே
உணர்வுகளை உள்ளங்களை உறவுகளை காரணம் காட்டி
அவளைக் கட்டிப் போட்டே
மீண்டும் அடுப்படியினுள் 
முடக்கிடலாம் என்றே கங்கணம் கட்டி
குடும்பமும் குழந்தையும் அடுப்படியும் -
இவை மட்டுமே உந்தன் பொறுப்பென்று
நிர்பந்திக்கும் சமூகத் தளைகளை
உடைத்தெறிய தயங்கி நிற்கக் காரணம்
குடும்பம் எனும் அமைப்பு 
உடையாமல் இருக்க - நாளும்
உடைந்து உருக்குலைகிறாள் பெண் !
உடைபவள் தொலைந்து போக மாட்டாள் !
தன்னை உருவாக்கிக் கொண்டே தானிருப்பாள் !
அவள் விஸ்வரூபம் எடுக்கும் ஓர் நாள் -
எவரும் எட்ட இயலா உயரத்தில்
அவள் நட்சத்திரமாய் ஜொலித்துக் கொண்டிருப்பாள் !



- பி.தமிழ் முகில்



Post a Comment

2Comments
  1. Replies
    1. மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      Delete
Post a Comment