சித்திரை மகள் | போட்டி | திருமதி. வந்தனா ஆறுமுகம்.



சித்திரை மகளே !

தமிழ் அன்னையின் 
தலை மகளே!
புத்தாண்டின் புது மகளே!
முக்கனியும் முத்தமிழும் கொண்டு
வரவேற்றோம் உன்னையே.

நீ பிறந்தஅன்று
பிறந்தது புத்தாண்டு,
நம் தமிழ் புத்தாண்டு.

சித்திரை மகளே!

மெல்ல நீ அடியெடுக்க
ஒவ்வொரு அடிக்கும் 
கொண்டாட்டம்,
ஊரெல்லாம் திருவிழா கோலம்!


சித்திரை திருநாள்!
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்!
சித்ரா பவுர்ணமி!
அட்சய திருதியை!

நாளெல்லாம் திருநாளே!

கத்திரியில் பூத்த 
சித்திரை மகள் அல்லவா!
வருவாய் வளம் தருவாய்! 


- திருமதி. வந்தனா ஆறுமுகம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)