போட்டி 1 | கவிதை | கவிஞர் சிவ யசோதாமணி


சித்திரை மகளே வருக!
தமிழின் முத்திரை மகளே வருக!
தமிழரை ஈர்த்த
தமிழ்மகளே வருக!
தமிழ் மாதங்களின்
தலைமகளே வருக!


நிறைமதி சூடிய
வளர்மதியே வருக!
முழுமதிக்கு தன்
பெயரை சூட்டிய
வெகுமதியே வருக!


செல்வத்தின் மகளே!
சித்திரை மகளே!
அட்சய திருதியில்
பொன்னும் பொருளும்
அள்ளி வழங்கும்,
அட்சய மகளே வருக!
சித்திரை மகளே வருக!


சித்திரை வெயில்
சுட்டெரிக்கும் ஆதவன்
இத்தனையும் சட்டென
மறந்துவிட...
நீ மழைத்துளியாய்
மண்ணில் தவழ...
மழைமகளே வருக!
சித்திரை மகளே வருக!


சித்திரை பூக்கள்
பூத்து குலுங்குதடி..
வேப்பம் பூ பச்சடி..
நோய் தீர்க்கும் மருந்தடி
முச்சுவை தத்துவமடி...
நல் வாழ்க்கைக்கு பாடமடி
சித்திரை மகளே வருக!


சித்திரை திருவிழா
ஒற்றுமை பெருவிழா...
மழை மும்மாரி பெய்ய
காடு கரை செழிக்க
கழனியெல்லாம் நிறைய
சித்திரை மகளே வருக!


சித்திரை சொந்தம்
சேருதே சங்கமம்...
பொங்குதே மங்களம்
மனசெல்லாம் அமர்களம்
சித்திரை மகளே வருக!
தமிழின் முத்திரை மகளே வருகவே!
வாழிய வாழிய வாழியவே!
சித்திரை மகளே வாழியவே!  


- கவிஞர் சிவ யசோதாமணி 

Post a Comment

0Comments
Post a Comment (0)