உலக புத்தக தினம்
எழுத்து வரம் கைபெற்றவளுக்கு
படிக்க புத்தகம் கைபெறவில்லை
சமூகத்தின் சாபம்...
புதிதாய் வெளி வரும் புத்தகம்
பிரிக்கமுடியாமல் பேக்கிங்
செய்திருப்பது அவளின் சாபம்...
பழைய புத்தக கடையிலும்
படித்து பார்க்க கொஞ்ச நேரமும்
அனுமதிப்பதில்லை என்பது
வியாபார தந்திரம்...
ஏழைகளின் வாழ்வு உயரவில்லை
நொந்தபடி நடையை கட்டுவது
நம் சமூக யதார்த்தம்...
பா. நீலாம்பரி
#அன்பின்விதை