பெண் | கவிஞர் சிவ யசோதாமணிபெண்....
அன்பையே சுவாசிப்பவள்..
அதிகாரத்தை புறக்கனிப்பவள்!
பாசத்திற்கு கட்டுப்பட்டவள்!
நேசத்தை பிரதிபலிப்பவள்!

பெண்....
பிறப்பில் சக்தியவள்!
பொறுப்பில் புத்தியவள்!
தாய்மையில் சுத்தியவள்!
கண்டிப்பில் உத்தியவள்!

பெண்....
மழலையாய் மகிழ்விப்பவள்!
மகளாய் நெகிழ்விப்பவள்!
மனைவியாய் துணைநிற்பவள்!

பெண்....
பருவத்தில் பரவசமவள்!
உருவத்தில் வசீகரமவள்!
இன்னும் துருவம் வரை பேசட்டும்...
பெண்ணே நீ அன்பையே சுவாசிப்பவள் என்று!

-கவிஞர் சிவ யசோதாமணி
   மதுரை-3

   தொடர்பு: 9788308612  

Post a Comment

1Comments
Post a Comment