கோத்தகிரியில் எரிவாயு விநியோகம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


நீலகிரி, மே.02:


கோத்தகிரி பகுதியில் வீடுகளுக்கு முறையாக எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க நுகர்வோர் அமைப்புகள் மற்றும் எரிவாயு ஏஜென்ஸிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உத்தரவின் பேரிலும், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் ஏற்பாட்டிலும், கோத்தகிரி வட்டாச்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் ஜெயந்தி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் முகமது சலீம், ஆலோசகர் பிரவின், விக்டோரியா, கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், துணை தலைவர் சுந்தர்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வீடுகளுக்கு நேரடியாக எரிவாயு சிலிண்டர் வழங்க வேண்டும், டெலிவரி நேரத்தில் மட்டுமே OTP தெரிவிக்க வேண்டும், 45 நாட்களுக்கு மேல் காத்திருப்போருக்கு உடனடி வழங்கல் செய்ய வேண்டும், விரல் ரேகை பதிவு செய்யாதவர்களுக்கு முகாம்கள் நடத்த வேண்டும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா கண்காணிக்க வேண்டும், தொலைபேசி அழைப்புகளுக்கு உடனடி பதில் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.


எரிவாயு ஏஜென்ஸி சார்பில் சுதாகேஸ் ரமேஷ், பகவதி கேஸ் விஸ்வநாதன், பிரதிக்ஷா ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என வட்ட வழங்கல் அலுவலர் ஜெயந்தி தெரிவித்தார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

Post a Comment

0Comments
Post a Comment (0)