ஊருக்குள் வரும் வனவிலங்கு பிரச்சனைக்கு தீர்வு கோரி கோத்தகிரி மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.


நீலகிரி, மே.02:


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அன்னை இந்திரா நகர் பகுதி மக்கள், வனவிலங்குகள் தாக்குதல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண கோரிக்கை விடுத்துள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த ஊர் தலைவர், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் காரணமாக ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் மேற்கொண்டனர்.


பின்னர், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கையொப்பங்களுடன் கூடிய மனுவை வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து, இனி வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கிறார்களா அல்லது தொடர்ந்து அலட்சியம் காட்டுகிறார்களா என்ற கேள்வியை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)