ஊத்தங்கரை அருகே முதியவர் கொலை, மூதாட்டி பாலியல் பலாத்காரம் – ஒரு மாதம் தப்பிய குற்றவாளி கைது.


ஊத்தங்கரை, மே.03:


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ஓபகாவலசை பகுதியில், கடந்த மாதம் 8ஆம் தேதி இரவு நடந்த கொலை மற்றும் பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அன்றிரவு விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கண்ணப்பன் (75) என்ற முதியவர் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். பின்னர், அவரது மனைவி சென்னம்மாள் (70) மீது மர்ம நபர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றார்.


இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஒரு மாதமாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், தற்போது அதே பகுதியைச் சேர்ந்த கிணறு வெட்டும் கூலி தொழிலாளி மணிகண்டன் (24) என்பவரை கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையிலான காவல்துறையினர் மற்றும் ஊத்தங்கரை துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, சிங்காரபேட்டை போலீசார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் குற்றவாளி பிடிபட்டுள்ளார்.


மணிகண்டன், சம்பவம் நடந்த கண்ணப்பனின் நிலத்தில் கிணறு வெட்டும் பணிக்காக கடந்த சில மாதங்களாக அந்த பகுதியில் சுற்றித் திரிந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.



© மகளிர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

Post a Comment

0Comments
Post a Comment (0)