ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி 2026 தேர்தல் முடிவு - தவெக வெற்றி.


ஊத்தங்கரை, மே.04:


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை (சட்டமன்ற தொகுதி 51) தொகுதியில் நடைபெற்ற 2026 தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில், தமிழக வெற்றி கழகம் (TVK) வேட்பாளர் என். இளையராஜா வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 70,201 வாக்குகள் பெற்று, தனது போட்டியாளரான அதிமுக வேட்பாளர் டி.எம். தமிழ்செல்வத்தை 5,198 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.


அதிமுக வேட்பாளர் டி.எம். தமிழ்செல்வம் 65,003 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். காங்கிரஸ் கட்சியின் ஆர். குப்புசாமி 60,993 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். மற்ற வேட்பாளர்களில், நாம் தமிழர் கட்சியின் மேகலா 6,629 வாக்குகள், தமிழக வாழ்வுரிமை கட்சியின் கே. தவராஜ் 291 வாக்குகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர் முனிராஜ் 257 வாக்குகள் பெற்றுள்ளனர்.


மொத்தம் 25 சுற்றுகள் கொண்ட வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடைந்த நிலையில், ஊத்தங்கரை தொகுதியில் தமிழக வெற்றி கழகம் முக்கிய வெற்றியை பதிவு செய்துள்ளது.



© மகளிர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

Post a Comment

0Comments
Post a Comment (0)