நட்புகளே,
நாம் எல்லாம் பொதுவாக ஒன்றை நினைத்துக் கொண்டு இருப்போம். நாம் நினைத்தது நடந்துவிட்டால், நாம் பெரிதாக வெற்றியடைந்துவிட்டதாகவும்; அது நடக்கவில்லை என்றால், நாம் பெரிதாகத் தோற்றுவிட்டதாகவும் நினைத்து, மன அழுத்தத்திற்கு ஆளாகி சோர்ந்து போய் இருப்போம்.
ஆனால், நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வாழ்க்கை ஆற்றோட்டமானது. நம் கையைப் பிடித்து, அழகாக நமக்கான இடத்தில் நம்மைச் சேர்க்கும் வரை பொறுமையாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
"நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்" என்ற வார்த்தை பாடலுக்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாம். ஆனால், வாழ்க்கைக்கு அது அவ்வளவு ஆரோக்கியமானதாக இருக்காது.
சரி, இப்போது நாம் வெற்றியடைந்ததாக சிலரை நினைத்து கொண்டாடிக் கொண்டு இருப்போம். அவர்களைக் கேட்டுப் பாருங்கள். இந்த நிலைக்கு வர அவர்கள் எத்தனை தியாகங்கள் செய்திருப்பார்கள், எத்தனை அவமானங்களைச் சந்தித்திருப்பார்கள், எவ்வளவு சகிப்புத்தன்மையோடு வாழ்ந்து அவற்றைக் கடந்து வந்திருப்பார்கள், எத்தனை தற்கொலை முடிவுகளில் இருந்து தப்பித்திருப்பார்கள், ஏன் மரணத்தைத் தொட்டுக்கூட மீண்டும் பிறந்து வந்திருப்பார்கள் என்று தெரியும்.
வலிகள் மூலமாக வழியைக் காட்டுவதுதான் இந்த வாழ்க்கையின் விளையாட்டு. சொல்லப்போனால், வலிகள்தான் நம்மை நிவாரணத்தைத் தேட வைக்கின்றன. வெயில் வரும் வரை நாம் நிழலைத் தேடுவதில்லை. எப்போதுமே பிரச்சினைகளின் பயணம் ஒரு தீர்வை நோக்கி மட்டும்தான் இருக்கும்.
பாலோ, தயிரோ எடுத்த எடுப்பிலேயே எதுவும் நெய் ஆகிவிடுவதில்லை. இடையில் அந்தப் பாலை காய்ச்சி, உறைய வைத்து, கடைந்து, மீண்டும் இன்னும் சுண்டக் காய்ச்சிய பிறகுதான் நெய் என்ற ஒரு மணத்தோடும், மதிப்போடும், பூரணத்துவத்தோடும் வருகிறது.
இந்த இயற்கைக்கு உட்பட்டவன்தான் மனிதனும். முதலில் நாம் கஷ்டங்களை அனுபவங்களாகப் பார்க்க நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நீங்களே யோசித்துப் பாருங்கள். எப்போது நீங்கள் அதிக வேலைகளை திறம்பட செய்திருக்கிறீர்கள் என்று. யோசித்தீர்களா? ஆமாம். நிச்சயமாக குறுகிய காலத்தில்தான் அதிக வேலைகளை ஆற்றலோடு செய்திருப்பீர்கள். யாரும் உதவ முடியாத இக்கட்டான சூழ்நிலையில், நீங்கள் வெளிப்படுத்திய ஒரு பலமான ஆற்றல்தான் உங்கள் மேலேயே உங்களுக்கே ஒரு தனி நம்பிக்கையையும், கர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கும்.
முதலில் நம்மை நாமே தட்டிக் கொடுக்க, நம் தோள்கள் நோக்கி நம் கரங்கள் உயராத வரை... நம் கண்ணீரைத் துடைக்க, நம் கண்கள் நோக்கி நம் கரங்கள் நகராத வரை... நாம் இந்த உலகில் ஆதரவற்றவர்தான்; அனாதைதான்.
அதனால், நாம் நல்ல விஷயங்கள் செய்யும்போது நம்மை நாமே தட்டிக் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில், தவறான விஷயங்களுக்கு நம் மனதில் தூண்டுதல் ஏற்படும்போது, நம்மை நாமே தட்டிக் கேட்க வேண்டும்.
ஆறுதலுக்காகவும், அன்பிற்காகவும் நாம் வெளியிடங்களில் தேடி அலைய வேண்டாம். நமக்கு நாம்தான் பலமான துணை. உங்களை நீங்களே நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
நம்முடைய மனம் கவலைகள் நிறைந்த குப்பைத்தொட்டி இல்லை; மலர்களும் மணமும் நிறைந்த அழகிய பூந்தொட்டி.
நட்புகளே, தவறில்லை; போரிடுங்கள். உங்கள் எதிர்மறை சிந்தனைகள் உங்களை வெல்ல நினைக்கும் போது எதிர்நீச்சல் போட்டு எழுந்து நில்லுங்கள். போட்டியிடுங்கள். ஆனால், உங்களுக்கு எதிரே நீங்களே ஒரு போட்டியாளனாய் நில்லுங்கள். உங்களை வீழ்த்தவும், வெல்லவும் உங்களால் மட்டுமே முடியும்.
கணியன் பூங்குன்றனார் சொல்லியிருக்கிறார்: "தீதும் நன்றும் பிறர் தர வாரா."
நமக்கான சந்தோஷங்கள் வரும்போது, "இதற்கு நாம்தான் காரணம்" என்று எப்படி மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறோமோ, அதுபோல கஷ்டங்கள் வரும்போதும், "இது நம்மால்தான்" என்று புரிந்து கொண்டு, அதில் ஒரு தெளிவைத் தேட வேண்டும்; பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இன்று நான் உங்களோடு பகிர்ந்து கொண்ட இந்தத் தகவலில் ஆகச்சிறந்த நீதியாக எதை எடுத்துக் கொள்ளலாம் என்றால், இந்த உலகில் வெற்றியாளன், தோல்வியாளன் என்று யாரும் இல்லை. இந்த வாழ்க்கையில் பாதையைத் தேடும் பயணத்தில் முட்களோடு போராடும் அனுபவங்கள்தான் வாழ்க்கை. அதில் கற்றுக் கொள்கிற பாடம்தான் சிறந்த வெற்றி.
தைரியமாக இருங்கள். எல்லாம் சரியாகப் போகும். இன்று போலவே நாளையும் இருந்தால், இந்த பூமி சுற்றவில்லை என்றுதான் அர்த்தம். நாளைய மாற்றம் நம் கையில். நாளை என்பது அதிக சுவாரசியம் நிறைந்த மர்மம். எது வந்தாலும் எதிர்கொள்வோம். மன அமைதியையும், மன வலிமையையும் இறுக்கமாகப் பிடித்துக் கொள்வோம். மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வோம்.
ஆக்கம்: அ. கவிதா சிவகுமார், சென்னிமலை, ஈரோடு மாவட்டம்.


*Manathodu Oru Payanam*
ReplyDeleteKavi this is a beautiful article & a good voice over script. It reads like a friend talking to you at midnight when you’re tired.
*Nambikkai + Nanban voice*
It doesn’t preach. It sits with you.
*Relatable Metaphors*
*"பாலோ, தயிரோ... நெய் ஆக"* - Explains growth through struggle better.
*வெயில் வரும் வரை நிழலைத் தேடுவதில்லை"* - Honest statement
*மனம் = குப்பைத்தொட்டி இல்லை, பூந்தொட்டி"* - Simple, memorable & attractive line.
*Core Message is Powerful*
The shift from “வெற்றி/தோல்வி” to “அனுபவம் = வெற்றி” and “நமக்கு நாம்தான் பலம்” is exactly what people in low phases need to hear.
*"தீதும் நன்றும் பிறர் தர வாரா"* quote anchors it with Tamil classical weight.
*1-2 Lines feel a bit heavy*
"எத்தனை தற்கொலை முடிவுகளில் இருந்து தப்பித்திருப்பார்கள்" - This is real and honest, but for general audience it can trigger.
This is not information. This is *ஆறுதல் + ஆயுதம்*.
*Best 3 lines*
1. "நம் கண்ணீரைத் துடைக்க, நம் கண்கள் நோக்கி நம் கரங்கள் நகராத வரை... நாம் அனாதைதான்".
2. "நம்முடைய மனம் குப்பைத்தொட்டி இல்லை; பூந்தொட்டி."
3. "உங்களை வீழ்தவும், வெல்லவும் உங்களால் மட்டுமே முடியும்."
You’ve taken a heavy topic and made it feel like warm filter coffee.
Super ✨.
Best wishes 🙂
Well said Kavitha madam👍 great writings👏🌹💐 keep going💐💐 got inspired by your good sayings🥰😍😀really awesome mam🤩 Awaiting for such more stories💯
ReplyDelete