இன்பா பாகம் - 1 | திருமதி.இராஜதிலகம் பாலாஜி

| Image Credit: webneel.com |

விடியற்காலை கதிரவன் துயிலெழும் முன்னரே இன்பா எழுந்துவிட்டாள். பாவடைத் தாவணியுடன், கையில் கலகலக்கும் வளையல் ஓசையோடு, உச்சி முதல் பாதம் வரை மஞ்சளின் ஒளிவீச்சுடன், தலையில் கூந்தலை அள்ளி முடிந்து கட்டிய துண்டுடன், அவள் ஒவ்வொரு அடியை எடுத்து வைத்து வாசலை நோக்கி வரும் போது, காலில் அணிந்த கொலுசின் சத்தம், ஒரு வித சங்கீத ராகத்தை மீட்டிச் செல்வது போல இருந்தது.

 

            இன்பா குனிந்து கோலம் போடும் போது, புல்லின் நுனியில் பனித்துளிக் கோர்த்து நிற்பது போல, அவள் காதருகே வியர்வைத் துளி நின்று கொண்டிருந்தது.

 

            வாசலில் சாணம் தெளித்து மிகப்பெரிய கண்கவர் வண்ணத்துடன் அழகான மயில் கோலம் வரைந்து, அக்கோலத்தின் நடுவே சாணத்தில் பிள்ளையார் பிடித்து மேலே பூசணிப் பூவையும் சொருகி வைத்தாள்.

 

            அவள் கோலத்தை வரைந்து முடிக்கவும், சேவல் கூவவும் பொழுதும் விடிந்தது.



            மாட்டுத் தொழுவத்துக்குச் சென்று, பால் கறப்பதற்காக போனதும், கன்றுக்குட்டி அவளையே சுற்றிச் சுற்றி துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது.

 

            "ரோஜா செல்லம்உன்னுடைய வயிறு நிறைஞ்சது போக மீதியிருந்தா நான் கறந்துக்கிறேன்.போபோஎன்றதும் தன் தாயின் மடியை ஆசையுடன் முட்டி மோதிக் கொண்டு பால் குடித்து.



            கன்றின் செய்கையையும், பசு தன்னுடைய நாக்கினால், தன் குட்டியை நக்கிக் கொண்டு தடவிக் கொடுத்து அன்பைப் பரிமாறி அரவணைக்கும் பசுவின் செய்கையை ரசித்தவள், சிறிது நேரத்தில் அவளுடைய நேரம் வந்ததும், பசுவிடம் பேசிக் கொண்டே பால் கறந்தாள்.

 

            செண்பகம், நாளைக்கு என்னை பொண்ணு பார்க்கப் பட்டணத்துல இருந்து வர்றாங்க. அதனால உங்கிட்ட இன்னைக்கு ரொம்ப நேரம் பேச முடியாது. எனக்கு நிறைய வேலை இருக்கு. நாளைக்கு சாயங்காலம் எல்லா கதையும் வந்து சொல்லுறேன். சரியா?" என்றதும், தலையை மட்டும் அசைத்தது செண்பகம்.

 

            "டாடிபோயும் போயும் பட்டிக்காட்டுல போய் அண்ணனுக்குப் பொண்ணு பார்க்கப் போணும்னு சொல்லுறீங்க.



            நல்லா யோசித்து தான் இந்த முடிவெடுத்திருக்கீங்களா?"

 

 

        "நித்யாநீ சின்னப் பொண்ணு. உனக்கு அனுபவம் பத்தாது. அப்பா எது செஞ்சாலும் அது உங்க நல்லதுக்குத்தான் இருக்கும்" என்றார் நித்யாவின் அம்மா மலர்விழி.

 

            "என்னவோ பண்ணுங்க" என்று கோபத்துடன் தன்னுடைய அறையை நோக்கி விரைந்து சென்றாள்.

 

            வேகமாக அலைபேசியை கையிலெடுத்து, இளமாறனுக்கு போன் செய்தாள் நித்யா.

 

            "அண்ணாஎங்க இருக்க? உங்கிட்ட கொஞ்சம் பேசனும்."

 

            "சொல்லு நித்யாவீட்டுக்கு தான் வந்துகிட்டு இருக்கேன்."

 

            "உனக்குப் பொண்ணு பார்க்கப் போற செய்தி தெரியும் தானே"

 

            " எஸ்"

 

           "எப்படிண்ணா கிராமத்துப் பொண்ணுக்கு ஓகே சொன்ன? உன் ஸ்டைல் என்ன? உன் படிப்பு என்ன? நம்ம அந்தஸ்துக்கு என்ன? எனக்கு நினைச்சாலே ரொம்ப கடுப்பாகுது"

 

            "ஹே நித்யா! ஜில்விடு பார்த்துக்கலாம்" என்றான் இளமாறன்.

 

            "என்னடா மச்சிஉன் தங்கச்சிக்கே இவ்வளவு காண்டாகுது. நீ என்னடானா ரொம்ப கூலா பதில் பேசுற"

 

       

            "என்னைப் பத்தி நல்லாவே உனக்கு தெரியும். காதல், கல்யாணம், கத்தரிக்காய், வெண்டைக்காய், சுண்டக்காயெல்லாம் நமக்கு செட்டே ஆகாது.

 

            பொண்ணுப் பார்க்க வரலைனு சொன்னா, அடுத்து தேவையில்லாம கேள்வி கேட்க ஆரம்பிச்சிருவாங்க. பார்த்துகலாம் மச்சி" என்று தன் நண்பன் ரவியிடம் கூறினான்.



தொடரும் 

Post a Comment

0Comments
Post a Comment (0)