இன்பா பாகம் - 2 | திருமதி. இராஜதிலகம் பாலாஜி.

| Image Credit: webneel.com | 

"அம்மா இன்பா!"

            "சொல்லுங்கப்பா..."

 

            "கொஞ்சம் நீசு தண்ணீ கொண்டு வாம்மா..."

 

            "சரிங்கப்பா..."

 

            "நான் தோட்டத்துக்குப் போயீ ஒரு எட்டுப் பார்த்திட்டு வந்திர்றேன்... அம்மா வந்ததும் மதியம் சொல்லிரும்மா..."



            "சரிங்கப்பா..."

 

            சிறிது நேரத்தில் கோவிலுக்குச் சென்ற இன்பாவின் அம்மா விசாலாட்சி வீட்டிற்குள் நுழைந்தார்.

 

            அவரைக் கண்டதும் வேகமாக அவரருகில் சென்ற இன்பா, "அம்மா... அப்பா தோட்டத்துக்குப் போயிருக்காங்க. டீச்சர் வீட்டு வரைக்கும் ஒரு எட்டு போயிட்டு வந்திர்றேன்."



            "சரி.. சரி... அந்த மனுஷன் வர்றதுகுள்ள சீக்கிரமா போயிட்டு வந்திரு. உங்க அப்பாவுக்கு மட்டும் தெரிஞ்சா உன்னோடு சேர்த்து எனக்கும் ஏச்சு விழும்" என்று கூறிக் கொண்டே இன்பாவின் நெற்றியில் கோவிலிருந்து கொண்டு வந்த விபூதியும், குங்குமத்தை பூசி விட்டார்.



            "அம்மா மகமாயீ! நீதான் தாயீ நல்ல வழி காட்டணும்..." என்றார்.

 

            "சரிம்மா வர்றேன்..." என்று காலில் சக்கரத்தைக் கட்டியது போலடீச்சர் வீட்டிற்கு ஓடிச் சென்றாள் இன்பா.

 

            மூச்சிரைக்க ஓடி வந்த இன்பாவின் முகம் பார்த்த டீச்சர், இங்க வந்து உட்காரு என்று கூறி ஐந்து நிமிட இடைவேளைக்கு பிறகு குடிக்க தண்ணீர் கொடுத்தார்.

 

            "எதுக்கு இவ்வளவு வேகம்? எப்பவும் உச்சிவேளைக்கு வர்றவ இன்னைக்கு சீக்கிரமே வந்திருக்க. என்ன செய்தி?"

 

            "டீச்சர்... என்னைப் பொண்ணு பார்க்க வர்றாங்க..."

 

            "... அப்படியா! நல்ல செய்தி இன்பா. ஆனால் நீ நேத்து வந்தப்போ, எங்கிட்ட இதைப் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்ல."




            "அட போங்க டீச்சர்... எனக்கே நேத்து ராத்திரி தான் தெரியும்."




            "என்ன இன்பா சொல்லுற?"



            "ஆமாங்க டீச்சர். நேத்து ராத்திரி உறங்க போகும் போது தான் சொன்னாங்க."



            "இது என்ன புதுக்கதையா இருக்கு?"



            "எனக்கு அவுங்க சொன்னதுல இருந்து ராத்திரி முழுக்க சுத்தமா தூக்கமே வரல. எனக்கு பயத்துல கையும் ஓடல, காலும் ஓடல டீச்சர்... ஒரு மாதிரி நெஞ்சுலாம் பட படனு அடிக்குது."



            "இது எல்லா பொண்ணுங்களுக்கும் வர்ற வியாதி தான்...."



            "என்னது வியாதியா?" என்று வெகுளித்தனத்துடன் கேட்டாள் இன்பா"



            "ஆமா இன்பா. இந்த வியாதி எனக்கும் வந்திருக்கு."



            "என்ன சொல்லுறீங்க டீச்சர்? எனக்கு ஒன்னுமே புரியலையே!"



            "ஆமாம் இன்பா.... ஒவ்வொரு பெண்ணுக்கும் பெண் பார்க்கும் படலம் வரும் போது மகிழ்ச்சி கலந்த ஒரு விதமான பய உணர்வும் சேர்ந்தே வரும். வர்ற மாப்பிள்ளை எப்படி இருப்பாங்க?

 

     

            அவுங்களுக்கு நம்மள பிடிக்குமா? நாம எதிர்பார்த்த மாதிரி மாப்பிள்ளை இருப்பாரா? இந்த வரன் நமக்கு ஒத்து போகுமா? அப்படினு பல்லாயிரம் கணக்கான கேள்வி நம்மளுடைய மண்டைக்குள்ள ஓடும்.



            அந்த நேரத்துல நிம்மதியா தூங்க வர்றாது. சரியா பசி எடுக்காது. மாப்பிள்ளை வந்து பார்த்திட்டு பதில் சொல்லிட்டு போகுற வர்ற மனசுல படபடப்பு இருந்துகிட்டே இருக்கும். ஆனால் அதே நேரத்துல சொல்லவே முடியாத அளவு மனசுக்குள்ள அப்படி  சந்தோஷமும் உற்சாகமும் ரெக்க கட்டி பறக்க ஆரம்பிக்கும் பாரு அட... அட... அது ஒரு கனா காணும் காலங்கள் இன்பா.."




            "ஆமாம் டீச்சர்... நீங்க சொல்லுற மாதிரி தான் செய்யுது. ஆனால்...."




            "என்ன இன்பா? எதுக்கு சொல்லும் போதே தயங்குற..."




            "மாப்பிள்ளை ரொம்ப படிச்சிருக்காரு டீச்சர்."



            "இது ரொம்ப சந்தோஷமான விஷயம் தானே இன்பா."



            "இல்ல டீச்சர்... எனக்கு கொஞ்சம் சந்தேகமா இருக்கு."



            "நீ தேவையில்லாம எதையும் போட்டு கற்பனை செய்யாதே! இந்த நேரத்துல பலவிதமான உணர்வு வருவது இயல்பு தான். அதையெல்லாம் மண்டையில ஏத்திக்காம சந்தோஷமாக போ இன்பா. மத்ததெல்லாம் நாளைக்கு பேசிக்கலாம்."



            "சரிங்க டீச்சர்..." என்று கூறியவள் வீட்டிற்கு ஒருவிதமான தெளிவுடன் புறப்பட்டுச் சென்றாள்.



            வீட்டிற்கு வந்த இளமாறன், "டாடி!பொண்ணுப் பார்க்க எப்போ கிளம்பனும்?" என்று கேட்டதும் தன்னுடைய மகனின் முகத்தை வியப்புடன் பார்த்தார் ரங்கநாதன்.




தொடரும் 

Post a Comment

0Comments
Post a Comment (0)