இன்பா பாகம் -3 | திருமதி. இராஜதிலகம் பாலாஜி.

| Image Credit: webneel.com |


 "வாப்பா ரவி.... எப்படி இருக்க? வீட்டுக்கு வந்தே ரொம்ப நாளாச்சு..." என்று கேட்டார் மலர்விழி.

 

            "நல்லா இருக்கேன்ம்மா... ப்ராஜெக்ட் ஒர்க் விஷயமா மும்பை போயிருந்தேன்ம்மா... நேத்து நைட் தான் வந்தேன்" என்றான் ரவி.

 

           "சரிப்பா...."



            "டாடி! நாளைக்கு எப்போ போகனும்?"



            "நாளைக்கு அதிகாலையிலேயே கிளம்ப வேண்டியிருக்கும். ஒன்பது மணிக்கு அங்க இருக்கனும்."



            "ஓகே டாடி!" என்று பதில் கூறியவன் ரவியை அழைத்துக் கொண்டு தன்னுடைய அறையை நோக்கிச் சென்றான்.

 

            ரங்கநாதனுக்கு இளமாறனின் திடீர் மாற்றம் கண்டு அவன் மீது  சந்தேகம் வரத் தொடங்கியது. கல்யாண பேச்சு எடுத்த போதெல்லாம் வேண்டாமென்று கூறியவன், இப்போது மட்டும் ஆர்வமுள்ளது போல நடிக்க வேண்டிய அவசியமென்ன இருக்கிறது என்று ஆழ்ந்த சிந்தனையில் சோபாவில் மூழ்கியிருந்தவரை , "என்னங்க... என்னங்க... இந்தாங்க மாத்திரை போடுங்க..." என்று ஒரு கையில்  சாப்படுவதற்கு முன் போட வேண்டிய சுகர் மாத்திரையும், மறு கையில் வைத்திருந்த தண்ணீர் டம்பளரையும் அவர் முன் நீட்டினார் மலர்விழி.

 

"நான் வந்து நிக்கறது கூடத் தெரியாமஅப்படி எதைப் பத்தி அவ்வளவு தீவிரமா  யோசனைல இருக்கீங்க?"

 

"இல்ல மலர்... இளமாறன் நடவடிக்கைய நீ கவனிச்சுயா?"



"நானும் கவனிச்சேங்க... போன மாசம் வரைக்கும் அந்த நிம்மியத்தான் கல்யாணம் செஞ்சிக்குவேனு ஒத்த காலுல நின்னான்.



            இன்னைக்கு என்னடான இப்படி பேசுறனு தோணுச்சு. எங்கிட்டோ அந்த நிம்மிய தலைய முழுகுணா சரி தான். அவளைலாம் பார்த்தா குடும்ப நடத்த வர பொண்ணு மாதிரியா இருக்கு. தலை முடிய விரிச்சு போட்டுகிட்டு, பாதி முடி செம்பட்டையாவும், மறுபாதி மஞ்ச கலரும் அடிச்சுக்கிட்டு பார்க்கவே பிடிக்கல... "



            "அந்தப் பொண்ணு எப்படி இருந்தா நமக்கென்ன மலர்... நம்ம பிள்ளைய நமக்கு அடக்கத் தெரியல.அதை விட்டுட்டு ஊருல இருக்கற பொண்ண குறை சொல்லுறது நியாயமில்ல மலர்..." என்று கடிந்து கொண்டார்.

 

            "இப்போ எதுக்கு தேவையில்லாம என் மேல கோபப்படுறீங்க?"



            "நீயே சொல்லு மலரு... அவனை வளர்க்கும் போதே உங்கிட்ட எத்தனை முறை சொல்லிருப்பேன்.கண்டிக்க வேண்டிய இடத்துல கண்டிச்சிடுனு...



            பசங்களுக்கு எப்பவும் அம்மாவ ரொம்ப பிடிக்க காரணம் என்னனு நினைக்கற? ஒரு பக்கம் பாசம் காரணமா இருந்தாலும், அவுங்க எது சொன்னாலும், கேட்டாலும் அம்மா நமக்காக எதையும் செஞ்சு தருவாள். 

 

            எல்லாத்துக்கும் ஆதரவு தருவாங்குற, உன் மேல உள்ள அசைக்க முடியாத நம்பிக்கை தான் எல்லாத்துக்கும் காரணம்" என்று பொறிந்து தள்ளினார்.

 

     

 

            "நல்லாயிருக்கே கதை. அது எப்படி எப்படி.... நான் கண்டிக்காதனால தான் இளமாறனுக்கு இந்த நிலைமையா? விடிந்தும் வேலைக்குப் போறது, பொழுது சாஞ்சதும் வீட்டுக்குத் திரும்பி வர வேண்டியது.

 

    

 

            பிள்ளைங்க மனசுல என்ன நினைக்குதுங்க? அவுங்களுக்கு உண்மையிலேயே என்னை தேவைனு ஒரு நாளாவது அவுங்கக்கிட்ட உட்கார்ந்து பேசிப் பார்த்திருக்கீங்களா?"




            "நான் அப்போ இத்தனை நாளு நேரங்காலம் பார்க்காம ஓடி உழைச்சு சம்பாதிச்சது யாருக்காக?




            நான் பட்ட கஷ்டம், பிள்ளைங்க படக் கூடாதுனு தான உங்களுக்காக எல்லாம் பார்த்துப் பார்த்து செஞ்சேன். அப்போ அதுக்கு பேரு என்ன மலர்?"

 

            இத்தனை நாளாக எதிர்பேச்சு பேசாத மலர்விழியின் செய்கை கண்டு, ரங்கநாதருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.



தொடரும்...

Post a Comment

0Comments
Post a Comment (0)