இன்பா பாகம் - 11 | திருமதி. இராஜதிலகம் பாலாஜி.

படம் நன்றி : webneel.com


அதிர்ந்து ஒலித்த அந்தக் குரலின் சொந்தக்காரி யாரு என்பதை நித்யாவைத் தவிர இளமாறன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.



இருக்கையில் அமர்ந்திருந்த இளமாறன் சட்டென்று எழுந்து நின்றான்.



கிராமத்து மக்கள் அனைவரும் அங்கு வந்திருந்த பெண்ணை கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டிருந்தனர்.



"யாருடி இந்தப் புள்ள? பட்டணத்துல ஆம்பளைங்க போடற உடுப்பு உடுத்திட்டு வந்து நிக்கறவ?" என்று அருகிலிருந்த தமிழினியிடம் கூறனார்.


"பாட்டி செத்த நேரம் உன் திருவாய மூடிகிட்டு இரு. அவுக காதுல மட்டும் விழுந்துச்சு உன்னை ஒரு கும்மு கும்மிருவாக..."



"என்னடி இன்னைக்கு ஒரே கூத்தா இருக்கு. எல்லா பொம்பளைங்களுக்கு குரலை உசத்திப் பேசுறாளுக..."



நீ கொஞ்சம் நேரத்துக்கு வாயே  மூடிட்டு சும்மாயிரேன் பாட்டி...." என்றதும் வெத்தலையை இடிக்கும் உரலில் போட்டு இடித்துக் கொண்டே அவர்கள் பேசுவதை கவனிக்கத் தொடங்கினார்.




"என்ன சார்? பொண்ணு பார்க்க வந்திருக்கீங்களா?"


"ஹலோ! எக்ஸ் கியூஸ் மீ... யாரு நீங்க? இங்க வந்து எதுக்கு தேவையில்லாம பிரச்சனை பண்ணுறீங்க"



"அதை உன் அண்ணங்கிட்ட கேளும்மா?"



"என்னண்ணா நடக்குது இங்க? யாரு இவுங்க?"



"அது வந்து..."


   


" காதலிக்கும் போது வராத தயக்கம், இப்போ காதலிய அறிமுகப்படுத்து போதும் மட்டும் வருதோ?"



"என்னது இவுங்க உன் கேர்ல் ப்ரெண்டா?"



பதிலேதும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தான்.


"சார் பதில் சொல்ல மாட்டாரு. நான் இங்க வருவேனு நீ எதிர்பார்க்கலைல மாறா?"


"இல்ல நிம்மி... ஜஸ்ட் அப்பா, அம்மா வற்புறுத்தனால தான் வந்தேன்" என்றதும் நிம்மியைத் தொடர்ந்து ரவி அங்கு வந்தான்.



ரவியைப் பார்த்ததும் இளமாறனுக்கு மேற்கொண்டு வார்த்தைகள் ஏதும் வரவில்லை.



"பேசுங்க சார்... ஏன் கதைய பாதியிலேயே நிப்பாட்டிடீங்க?" என்றதும் தலையை கவிழ்ந்து கொண்டான்.



"நித்யா உனக்கு மட்டுமில்ல, இங்க இருக்குற எல்லாருக்கும் நான் ஒரு உண்மைய சொல்ல விரும்புறேன். நானும் இளமாறனும் ரெண்டு வருஷமா லவ் பண்றோம். இந்த விஷயம் அவுங்க அம்மா, அப்பாவுக்கு கூடத் தெரியும்.



"இங்க நான் வந்தது, இவனுக்காக இல்ல. என்னை மாதிரி வேற எந்தவொரு அப்பாவி பொண்ணும், இப்படி கேடு கெட்ட எண்ணம் பிடிச்சவங்கிட்ட ஏமாந்துறக் கூடாதுனுங்கற ஒரு நல்ல எண்ணத்துல தான் இங்க வந்தேன்.




"நிம்மி..." என்று இளமாறன் அழைத்ததும், "ச்சீ.... நீயெல்லாம் என் பேர சொல்லுறதுக்குக் கூட உனக்கு தகுதி கிடையாது. ஒழுங்கா திருந்தி வாழுற வழியப்பாரு. உன் கூடப் பழகுன தோஷதுக்காகத் தான் சும்மா விட்டுட்டு போறேன். இல்லைனா, போலீஸோட வந்திருப்பேன்" என்று மறுவார்த்தை ஏதும் பேசாமல் அவனிடம் ஏமார்ந்து விட்டதை எண்ணி அழுதுக் கொண்டே அங்கிருந்து கிளம்பிச் சென்றாள் நிம்மி.



கிராம மக்கள் ஒருவருக்கொருவர் முணுமுணுக்கத் தொடங்கினார்கள்.




"சம்பந்தி வயசு பிள்ளைங்க ஏதோ, விவரம் அறியாம பேசிட்டு போதுங்க. அது போனா போது..."  என்று கந்தசாமி கூறியதும் "யோவ்... நீயெல்லாம் மனுஷனாயா? " என்ற ஒரு குரல் கூட்டத்திலிருந்து பலத்த சத்தத்துடன் ஒலித்தது.




கிராமத்து மக்களுக்கு அங்கு நடக்கும நிகழ்வுகள் பார்த்து அடுத்தடுத்து அதிர்ச்சியாக இருந்தது.



தொடரும்...

Post a Comment

0Comments
Post a Comment (0)