இன்பா பாகம் - 5 | திருமதி. இராஜதிலகம் பாலாஜி.

| Image Credit: webneel.com |


மலர்விழியின் பேச்சு ரங்கநாதரின் உள்ளத்தில் மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியது. இத்தனை நாட்களாக தன்னோடு இருந்தவள். தன் சுக துக்கங்களை சுமந்து கூடவே பயணித்தவள்.



            தன்னிலையின் உண்மை நிலையை உணர்ந்தவள் என்று நம்பிக்கையோடு இருந்த ரங்கநாதனுக்கு, மலர்விழி பேசிய பேச்சு மனதில் ஆழிப் பேரலை உருவாகி அடியோடு தன்னை சாய்ந்து விட்டது போல அக்கணம் உணர்ந்து நிலைகுலைந்து போனார்.



            எப்படி ஒரு நிமிடம் யோசிக்காமல் இப்படி பேசி என்னை குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிட்டாள் என்று தன் எண்ணத்தில் மலர்விழி பேசியதை குறித்து வருத்தத்துடன் அனைத்தையும் அசைப்போட்டு கொண்டிருந்தார்.



            மறுபதிலேதும் பேசாமல் மௌனமாக அவ்விடம் விட்டு கடந்து சென்றார் ரங்கநாதன்.



            ரங்கநாதனின் மௌனம் மலர்விழிக்கு மிகவும் பயமாக இருந்தது. அவசரப்பட்டு வார்த்தைகளை உதிர்த்து விட்டோமோ என்று கண்களில் கண்ணீரோடு, பிரச்சனையை எப்படி சரி செய்வதென்று தெரியாமல், தன் கை விரல்களைப் பிணைந்து கொண்டிருந்தார்.

 

            "என்னடா இளமாறா!  நாளைக்குப் பொண்ணு பார்க்க சம்மதங்கற மாதிரி, நீ வாட்ல உங்கப்பாட்ட போக வேண்டிய நேரமெல்லாம் கேட்குற..."

 

            "இதுல என்னடா மச்சான் இருக்கு? போகுற மாதிரி போகிட்டு, அந்தப் பொண்ணையும் பார்த்து கொஞ்ச நேரம் சைட் அடிச்சிட்டு, கொஞ்ச நாளு பிறகு பிடிக்கலைனு சொல்லி கழட்டி விட்டுட வேண்டியது தான்."

 

            "அப்போ நிம்மிடா?"

 

            "நிம்மில டம்மி பீஸ் மச்சி... அன்பா உருகுற மாதிரி உருகி, எமோஷனல் ப்ளாக் மைல் பண்ணா போதும், ஆட்டோ மெட்டிக்கா என் வழிக்கு வந்துருவாள்... கொஞ்ச நாள் ஜாலியா சுத்திட்டு அப்படியே கை கழுவிட வேண்டியது தான்."




            "டே! என்னடா சொல்லுற? அப்போ நீ அவளை உயிருக்குயிராய் காதலிக்கலையா?"

 

            "காதலும் கிடையாது... கத்தரிக்காயும் கிடையாது..."



            "எனக்கு இப்படி ஒருத்திக்கூடலாம் வாழப் பிடிக்காதுடா..."




            "நமக்கெல்லாம் ஃபாரின் லைஃப் ஸ்டைல் தான் ஒத்து வரும்."



            "அவுங்கள மாதிரி தான் வாழனும் ஆசைப்படறேன். நமக்குலாம் இந்த எமோஷனல் பாண்டிங்ல இன்ட்ரஸ்ட் கிடையாது."




            "இப்போ நீ எல்லாம் பேசுவடா. நாளைக்கு உனக்கு வயசாகும் போது தான் புரியும். நமக்காக கூடவே இருந்து அன்பு காட்டி பேச ஒரு துணையில்லாத போது தான் புரியும். நம்ம நாட்டு மக்கள் ஏன் அன்பு, காதல், குடும்பம், உறவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுங்கறாங்கனு?



            "போடா டே... லைஃப எஞ்சாய் பண்ணறதை விட்டுட்டு, தேவையில்லாம எதையாவது பேசி என் நேரத்தை வேஸ்ட் பண்ணாத... காசை தூக்கிப்போட்டா பாக்குறதுக்கு லட்சக்கணக்கான பேரு வருவாங்கடா.போட... போ... வேற ஏதாவது வேலையிருந்தா போய் பாரு..."



            "இன்னைக்கு உனக்கு அளவுக்கதிகமான செல்வாக்கும், உடல் நலமும் நல்லா இருக்கறதால இப்போ இவ்வளவு தெனாவட்டா பேசற இளமாறா. இங்க எதுவுமே நிரந்தரம் கிடையாது இளமாறா. நமக்குனு அன்பான ஒரு வாழ்க்கை துணையிருக்கனும்டா."



            "மச்சான் இதோட நிறுத்து! இதுக்கு மேல ஏதாவது பேசுனேனா, காண்டாகிடுவேன். சும்மா பூமர் அங்கிள் மாதிரி பஞ்சாங்கம் பாடாம வேற ஏதாவது கதையிருந்தா பேசு..."

 

            "நான் உனக்கு பூமர் அங்கிளாடா? நல்லதுக்கே காலமில்ல!"

 

            "நீ என்ன வேணும்னாலும் செஞ்சிக்கோ.. ஆனால் பொண்ணுங்க உணர்வுகளோட மட்டும் விளையாடாத! நான் கிளம்புறேன்."



தொடரும் 

Post a Comment

0Comments
Post a Comment (0)