விழியே! வரம் கொடு | மைதிலி ராமையா


அவயவங்கள்  துடித்தாலும்

அடிமனது வலித்தாலும்


எவர்துயரம் கண்டாலும்

எப்படி நீ கரைகின்றாய்


உவர்ப்பான நீர் வடித்து

உணர்ச்சிவசப் படுகின்றாய் 


நவமணியாம் கண்மணியே!

நானும் உன்போல் வாழவேண்டும்


எவர்துயரம் கண்டாலும்

என்மனதும் துடிக்க வேண்டும்


அவசியம் ஓர் வரம் வேண்டும்-உன்

அருங்குணத்தை பெற  வேண்டும் 

 

இவ்வுலக மக்களெல்லாம்

இவ்வின்பம் நுகர வேண்டும்


எவ்வுயிர்க்கு தீங்கெனினும்-துடிக்க

இதயங்கள் பல வேண்டும். 



- மைதிலி ராமையா.

Post a Comment

0Comments
Post a Comment (0)