ரௌத்திரம் பழகு. | அம்சிபாரதி


ஓடிவிளையாடு என்றீர் பாரதி!

நான் ஓடாமல் விளையாடுகிறேன் பாரதி!

அப்பாவோடு விளையாட

ஆசைபாரதி!

ஆனால்...

அவரோ ஆன்ராய்டில் மூழ்கிவிட்டார் பாரதி!

அம்மாவின் செல்லமுத்தம் வேண்டும் பாரதி!

ஆனால்

அவளோ சீரியலில் சிக்கிக்கொண்டார் பாரதி!

புத்தகபொதி சுமக்க ஆளானேன் பாரதி!

ஆனால்

உன் ஞானயொளி சுமக்க நாளொன்று வேண்டும் பாரதி!

அண்ணன் தங்கையோடு விளையாட ஆசை பாரதி!

ஆனால்....

அப்பா அம்மாவோ!!!

நாமே இருவர் நமக்கேன் இருவர் என்று!

என்னோடு நிறுத்திக்கொண்டார் பாரதி!

ஆதலால்....

ஒத்தையாய் நின்று செல்லினகேமோடு செல்லறித்துபோகிறேன்

பாரதி!

வெளியே விளையாட எஞ்சோட்டு வித்தகர்கள் தேடினேன் பாரதி!

ஆனால்!

எல்லோரும் எட்டடுக்கு மாளிகையில் என்ன செய்கிறார்கள் என்றே

தெறியவில்லை பாரதி!

தாத்தா பாட்டியோடு தத்திவிளையாட ஆசைபாரதி!

ஆனால்...

தாத்தாபாட்டியோ முதியோர் இல்லத்தில் முடக்கப்பட்டார் பாரதி!

என்வீட்டில் பல அறைகள் திறக்கப்படாமலே உள்ளது பாரதி!

ஆனால்....

என் தந்தைக்காக கருவறை திறந்த பாட்டிக்கு !...

ஒருவறை கூட இல்லாமல் போனது பாரதி!

இதுதான் நான்கொண்ட மிகப்பெரிய நாகரிகக்கோபம் பாரதி!

என் தாத்தாப்பாட்டியின் இறுதிசடங்கிற்க்கு இங்கு வருவார் பாரதி!

அப்பா அவர்களை இருக்ககட்டி அழுவார் பாரதி!

அன்றாவது என்வீட்டு பூட்டிய அறைகளும்!

இவர்களின் இருட்டு இதயமும் இணைந்தே திறக்கட்டும் பாரதி!


- அம்சிபாரதி, பரங்கிப்பேட்டை, கடலூர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)