படம் நன்றி: தினமலர் |
அன்பின் உன்னத மொழிகளில் தாயாய்
அறிவினை ஊட்டும் பாட்டியாய்
கண்டிப்பின் தெளிவில் அக்காவாய்
பாசத்தின் பொழிவில் தங்கையாய்
துன்பங்களை இன்பமாக்கும் மகளாய்
முதுமையில் பொழுதுபோக்கும் பெயர்த்தியாய்....
இவை அனைத்திற்கும் அப்பால் தாயின் அன்பும், பாட்டியின் அறிவும், அக்காவின் கண்டிப்பும், தங்கையின் பாசப்பினைப்பும், துன்பத்திற்கு துன்பம் கொடுத்து விரட்டிய மகளாய்,முதுமையினை பொழுபோக்கும் பெயர்த்தியாய், நமக்கான இவ்வுலகில் நம் "வாழ்க்கையின் பாடபுத்தகமாய்" நம்முடன் கடைசி வரை பயணிப்பவள் தான் மனைவி.
- ர. புவனேஸ்வரி