நானோ கல்லாய்
சமைந்து கொண்டிருக்கிறேன்...
ராஜ்யத்தை தேடி தேடி அடைந்து
ஞானியான எங்கள் தேசத்தில்,
ராஜ்யம் துறந்து ஞானியான
உன்னை புரிந்தவர்கள் குறைவே...
எனக்கும் புரியவில்லை,
என் தேடல் துவங்கும் முன் வரை...
அதனால் என்ன
உனக்கும் ஒரு போதி மரம்
தருவிக்கிறேன்...
இல்லையெனில்
இது புத்தனே இல்லை
சொல்லிவிடுவார்கள்...
இப்போதும் சொல்கிறேன்
நீயோ கற்சிலையாய்...
நானோ கல்லாய்
சமைந்து கொண்டு...
- பா. நீலாம்பரி