ஜன்னல் வழியே
நிலவை பார்ப்பது
அவ்வளவு பிடித்தம் இல்லை...
ஜன்னல் கம்பியை
வளைத்து நெளித்து
தலையை நீட்டி குறுக்கி
வெளியே எட்டி பார்க்கிறேன்...
இதழை நனைத்த
குளிர் தென்றலின் தழுவலோடு...
சில்லென்ற காற்று
உள்நுழைந்து
அடி வயிறு வரை பரவ...
"மண்டையில் டொம்முனு
கொட்டு விழுந்தது
என்னடி வெளியே
எட்டி பார்த்துகிட்டு
உள்ளே போ" என்று
அண்ணன்காரன்...
மூச்சை இழுத்து
நுரையீரல் முழுக்க
நிரப்பிகொண்டேன்
குளிர் தென்றலை...
மனம் முழுக்க சில்லிப்புடன்
ஜன்னலுக்கு உள்ளே நான்,
திரும்பவும் நிலவை
பார்த்துக் கொண்டு..
💗💗💗.
- கவிஞர் நீலாம்பரி.