மெல்ல தழுவுகிறது நிறம். | கவிஞர். நீலாம்பரி



அந்த இரவிற்கு
என் மேல் என்ன கோவமோ...
மூன்றாம் ஜாமம் கழிந்தும் கூட
அழுந்திக் கொண்டிருந்தது
அவன் நினைவுகளை...
திரும்ப திரும்ப எண்ணெய் விட்டு
ஏற்றிக்கொண்டே இருந்தேன்,
சுடர் மனம் முழுக்க
ஒளிர்ந்தது அவனாலே...
அடுத்த ஜாமம் தொடர்வினில்
கருக்கல் பூத்தது,
இன்னும் வந்து சேராத கதிரவனின்
கதிர் ஒன்றால்...
அடிவானம் சிவந்து, இருள் நீங்கி
மெல்ல தழுவுகிறது நிறம்...

பா. நீலாம்பரி 

Post a Comment

0Comments
Post a Comment (0)