கோத்தகிரி அன்னை இந்திரா நகர் பகுதியில் உடனடி நடவடிக்கை எடுத்த நெடுகுளா பஞ்சாயத்துக்கு பொதுமக்கள் பாராட்டு.


நீலகிரி, மே.07:


அன்னை இந்திரா நகர் பகுதியில் நீண்ட நாட்களாக தெருவிளக்குகள் எரியாமல் இருந்ததாலும், சாக்கடை கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாமல் இருந்ததாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நெடுகுளா பஞ்சாயத்து நிர்வாகத்திற்கும், EB அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்தவுடன் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டனர்.


அதன்படி பழுதடைந்த தெருவிளக்குகள் சரிசெய்யப்பட்டு புதிய மின்விளக்குகள் அமைக்கப்பட்டதுடன், சாக்கடை கால்வாய்களும் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்று நடவடிக்கை எடுத்த நெடுகுளா பஞ்சாயத்து நிர்வாகத்திற்கும் மற்றும் EB அலுவலக அதிகாரிகளுக்கும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டுகளை தெரிவித்தனர்.



- மகளிர் குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் S. சங்கீதா

 

Post a Comment

0Comments
Post a Comment (0)